அறிமுகம்

அதிகரிக்கும் போக்கிலான நுகர்வுக் கலாசாரம், வாழ்வுக்கு ஒவ்வாத நடத்தைக் கோலங்களின் வெளிப்படுத்துகை, பலமிழந்து செல்லும் பெற்றோரியம், பரீட்சையை மையப்படுத்திய கல்வி முறைமை என்பன இளைஞர்களின் சுயகட்டுப்பாட்டுக்கு ஊறுவிளைப்பதாக அவர்களின் வாழ்க்கையை சிதைப்பதாக அமைகின்றன.

வருமுன் காப்போம் என்கின்ற இந்த இணையத்தளம் சுயகட்டுப்பாட்டினை இழந்து அல்லலுறும், இலகுவில் சுயகட்டுப்பாட்டை இழக்கும் தன்மை வாய்ந்த இளைஞர்களை, பெற்றோர், ஆசிரியர், இதர சேவை வழங்குநர்கள் அடையாளம் கண்டு உதவும் இயலுமை மிக்கவர்களாக மாற்ற வல்ல அறிவூட்டல்களை உள்ளடக்கியது.

சுயகட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வூட்டலின் மூலம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், ஆபத்தான உறவுகள், துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு உள்ளாவதையும்; தற்கொலை, அடிமையாதல் போன்ற இடர்தரு நடத்தைகளை அவர்கள் மேற்கொள்வதையும் தடுக்கின்றது.

மேலும் உதவிகள் தேவைப்படும் இளைஞர்கள், அவரகளுக்கு உதவ விரும்புபவர்கள் நிகழ்நிலையிலோ அல்லது நேரடியாகவோ அவர்களுக்கான சந்திப்புகளை பொருத்தமானவரகளுடன் ஏற்படுத்தவும் வாய்ப்பை வழங்குகின்றது.


வரும்முன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
-குறள் 435.

குற்றம் வராமல்காத்துக் கொள்ளாதவன் வாழ்வு, நெருப்பின் முன் வைக்கோற் போர் அழிவது போல் அழிந்து விடும்.



Our Blog